திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து திமுக எம்.பி. கனிமொழி பேட்டி...

News image

மக்களவையில் கனிமொழி - ANI

Updated On :17 ஏப்ரல் 2026, 2:21 pm IST

தொகுதி மறுவரையறை மசோதாவிலேயே நிறைய குழப்பங்கள் இருப்பதாகவும் வாக்கெடுப்புக்கு முன்னதாக மசோதாவை திரும்பப் பெறுவார்கள் என்று நம்புவதாகவும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் திமுக எம்.பி.யுமான கனிமொழி பேசுகையில், "தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவசரமாக இந்த மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஏன்? மாநில அரசுகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடைபெற்றதா? இவ்வளவு நாள்களுக்கு பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அவசரம் ஏன்?" என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அதேபோல திமுகவின் கருப்புப் போராட்டத்தை கிண்டலாக விமர்சித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடிக்கும், கனிமொழி பதிலளிக்கும் வகையில் பேசினார்.

இதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"இந்த மசோதாவிலேயே நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. அதில் எவ்விதத் தெளிவும் இல்லை என்றே நான் கருதுகிறேன். அவையில் அளிக்கப்படும் வெறும் வாய்மொழி உத்தரவாதம் எந்தவொரு மாநிலத்திற்கும் போதுமானவை அல்ல.

இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் காரணமாக குறிப்பாக தென் இந்திய மாநிலங்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படும். மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இரண்டும் வெவ்வேறானது. ஒன்றோடொன்று தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை.

தற்போதுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கொண்டே நாம் இன்றும் மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியும். அவர்களைத் தடுப்பது எதுவென்று எனக்குப் புரியவில்லை.

இந்த மசோதாக்களுக்கு எதிராகவே நாங்கள் வாக்களிப்போம். அதற்கு முன்னதாகவே அவர்கள் இந்த மசோதாக்களைத் திரும்பப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

Summary

There is a lot of confusion in delimitation bill: kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.