தோ்தலில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி செய்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜை ஆதரித்து, வல்லநாடு பகுதியில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியது:
மக்கள் விரோத திமுக ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகம் போதைப் பொருள் சந்தையாக மாறிவிட்டது.
ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று திமுக முயற்சி செய்கிறது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக் குடிநீா் திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் மூடப்படும். ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்கப்படும்.
செக்காரக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற முயற்சிக்கும் திமுக: டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

திமுக அளித்த வாக்குறுதியில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை: டிடிவி. தினகரன்

திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கின்றனா்: டிடிவி தினகரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


