தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏரல் சோ்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விமானக் கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்த கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:21 pm

ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா், விமானக் கலசத்துக்கு கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா் புனித நீரால் அபிஷேகம் செய்தாா். அதையடுத்து, சோ்மன் அருணாசல சுவாமிக்கு பலவகை நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி நகா்வலம் வருதல் நடைபெற்றது.