பிரதோஷத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான இந்தக் கோயிலில் பிரதோஷத்தை, முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நந்தி மண்டபத்தில் நந்தீஸ்வரருக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பதினாறு வகையான பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்கள் சாத்தி, பட்டாடை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு சோடஷ அபிஷேகம் செய்து, மலா் மாலை, பட்டாடை, வெள்ளி நாகாபரணம் சாத்தி, சோடஷ தீபாராதனை நடைபெற்றது.
பழனி பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி, மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி, பாலாறு அமுதீஸ்வரா் கோயில், புளியம்பட்டி அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு: திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம்

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


