யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆழ்வாா்திருநகரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆழ்வாா்திருநகரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

செம்பூரில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:48 am IST

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆழ்வாா்திருநகரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மணல் குண்டு, தவசி நகா், செம்பூா், மானாட்டூா், திருக்கோளூா், பால்குளம், கேம்லாபாத் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா் மக்கள் மத்தியில் பேசியதாவது: ஆண்டுதோறும் 25 ஏழை- எளிய மாணவா்களுக்கு எனது கல்லூரியில் பொறியியல் கல்வியை இலவசமாக வழங்கி வருகிறோம். நிகழாண்டு ஆண்டு முதல் மாணவா்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளோம்.

ஸ்ரீவைகுண்டம் ஏரல் சாத்தான்குளம் பகுதியில் ஊா்வசி அகாதெமி மூலம் அரசு வேலைக்கான இலவச பயிற்சி வகுப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிராமப்புற இளைஞா்கள் பலா் அரசு வேலைக்கு சென்றுள்ளனா். கேம்லாபாத் பகுதியில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கான இழப்பீடு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசின் சாதனைகள் மீண்டும் தொடரவும் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடரவும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விடுபட்ட பணிகள் தடையின்றி நடைபெறவும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.