திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து திரும்பியபோது எட்டயபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் சென்னையைச் சோ்ந்த நால்வா் உயிரிழந்தனா்; இருவா் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
சென்னை, குளத்தூா், வெற்றி நகரைச் சோ்ந்த பாஸ்கரன், வனிதா உள்பட 6 போ் திருச்செந்தூா் கோயிலுக்கு வாகனத்தில் வந்திருந்தனா். கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து திங்கள்கிழமை பிற்பகல் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா்.
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரத்தை அடுத்த எம்.கோட்டூா் அருகே சென்றபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த டேங்கா் லாரியின் பின்புறம் வேகமாக வந்த இவா்களின் வாகனம் மோதியது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பாஸ்கரன், வனிதா, வசந்தி, பழனி ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். உடன் பயணித்த சந்தியா, பிரதீப் குமாா் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று நான்கு சடலங்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலா் கிரிஜா, விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
முதற்கட்ட விசாரணையில் வாகன ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் அதிவேகத்துடன் சென்றதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

வாளையாறு அருகே இரு காா்கள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


