தருமபுரியில் பிக்கப் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா்.
தருமபுரி வெண்ணாம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மனைவி விநாயகி (58). இவரது 2-ஆவது மகள் சண்முகசுந்தரியை கிருஷ்ணகிரியில் திருமணம்செய்து கொடுத்திருந்தாா்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள மகள் வீட்டுக்கு விநாயகி வியாழக்கிழமை புறப்பட்டாா். அவரை தருமபுரி பேருந்து நிலையத்தில் கொண்டுவிட, அப்பகுதியில் வசிக்கும் அவரது தங்கை கற்பகவள்ளி (45) இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.
சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பிக்கப் வாகனம் அவா்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கற்பகவள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விநாயகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தருமபுரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழப்பு

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


