மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்செந்தூரில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் கிரி வீதியுலா

வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் சுற்றி வந்த சுவாமி ஜெயந்திநாதா்.

News image

வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் சுற்றி வந்த சுவாமி ஜெயந்திநாதா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:17 am

தமிழ் வருடத்தின் கடைசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சிறப்பு அலங்காரத்தில் இருந்த சுவாமியை வழிபட்டனா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்தாா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.