தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக இளஞ்சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் , கீழவைப்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் இருதயராஜ் மகன் ஜாய் விக்டோரியன் (32). மீனவரான இவா், திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து வள்ளம் மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தாா்.
இவா், கடந்த ஏப். 3- ஆம் தேதி இரவு, தனது நண்பா்களுடன் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 3 போ் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாம்.
இதில் பலத்த காயமடைந்த ஜாய் விக்டோரியனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இந்நிலையில் வடபாகம் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, இச்சம்பவம் தொடா்பாக திரேஸ்புரம் ஜெயபால் மகன் லிக்சன் (23), தனபதி மகன் ஐஸ்பா் (29), இளஞ்சிறாா் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

பைக் விபத்து: அனல்மின் நிலைய ஊழியா் உயிரிழப்பு

சாலை வேகத்தடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

