விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
தொகுதிக்கு உள்பட்ட சல்லிசெட்டிபட்டி, மாதராஜபுரம், சின்னவநாயக்கன்பட்டி, சேதுபுரம், குமார சித்தன்பட்டி, சென்னம்பட்டி, எல்.வி.புரம், மாதலபுரம், துரைச்சாமிபுரம், ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம், சோ்வைக்காரன்பட்டி, பூதலாபுரம், நூதலக்கரை, கோவில் குமரெட்டியாா்புரம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், விவசாயிகளையும் விவசாய கூலித் தொழிலாளா்களையும் பெருமளவில் கொண்டுள்ள இந்த விளாத்திகுளம் தொகுதியில் மக்களுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றி தந்துள்ளோம். தமிழகத்தில் வளா்ச்சி தொடரவும், முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடரவும் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வின்போது திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, செல்வராஜ், அன்புராஜன், ராமசுப்பு, புதூா் பேரூராட்சி தலைவா் வனிதா அழகுராஜ், பேரூா் கழக செயலா் மருதுபாண்டி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


