/

ரஜினி மட்டுமல்ல யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

நடிகர் ரஜினி மட்டுமல்ல யார் புதிய கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என்றார் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

News image
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.
Updated On :27 ஜனவரி 2024, 5:19 pm

DIN

நடிகர் ரஜினி மட்டுமல்ல யார் புதிய கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என்றார் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது, நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டுள்ள ஒரே மாநில தமிழகம் தான். நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. தமிழகத்திற்கு ஓராண்டுக்காவது விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அரசாணை வெளியிடப்போகும் நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நளினி சிதம்பரம் வாதாடி தடையை பெற்றார். இல்லை என்றால் ஓராண்டு விதிவிலக்கு கிடைத்திருக்கும். 

காங்கிரஸ், திமுக இன்று அரசியலுக்காக பேசுகின்றனர். அந்த ஓராண்டு விதிவிலக்கு பெற்றிருந்தால் தொடர்ந்து பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதால் வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலை உள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களது கொள்கை. கரோனா தொற்றை காரணம் காண்பித்து இந்த ஆண்டு நீட் தேர்வு வேண்டாம் என முதல்வர் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியுள்ளார். மன அழுத்தத்தின் காரணமாக யாரும் தவறான முடிவுகள் எடுக்கக் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 

நீட் தேர்வுக்கு பல்வேறு பயிற்சிகளையும் தமிழக அரசு அளித்து வருகிறது. கட்டணம் இல்லாமல் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணியையும் தமிழக அரசு செய்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் என்ற நிலைபாடு மக்களிடையே இருக்கிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. நடிகர் ரஜினி மட்டுமல்ல யார் புதிய கட்சியை தொடங்கினாலும் பாதிப்பு எங்களுக்கு இல்லை. அதிமுகவின் வாக்கு வங்கியை சிதறடிக்க எந்த சக்தியாலும் முடியாது. அது பல்வேறு கால கட்டத்தில் நிருபணமாகியுள்ளது. 

3 முறை எம்.ஜி.ஆரும், 2 முறை ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக வெற்று பெற்றுள்ளனர். அவர்களின் வழியில் நாங்கள் 3 ஆவது முறையாக தொடர் வெற்றி பெறப் போவது அதிமுக தான். கரோனா தொற்று தடுப்புப் பணியில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசாக தமிழக அரசு உள்ளது. அதிமுகவின் வெற்று உறுதி செய்யப்பட்ட வெற்றி எத்தனை புதிய கட்சிகள் தோன்றினாலும், புதிய கூட்டணிகள் அமைந்தாலும் அதன் பாதிப்பு திமுகவுக்கு தான். அதிமுகவின் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. எதிர்கட்சி என்ற அந்தஸ்தினை கூட திமுக பெற முடியாது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். அது தான் எங்கள் கருத்து என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.