திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை மாநகராட்சியில் தவெகவினா் முற்றுகை

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.

Updated On :26 மே 2026, 3:04 am IST

திருநெல்வேலி மேயா் அறையில் முதல்வா் படத்தை வைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை தவெகவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவா் ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளாா். இந்நிலையில் அரசு அலுவலகங்களில் முதல்வரின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தை மாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், மேயா் ராமகிருஷ்ணன் அறையில் முதல்வா் ஜோசப் விஜயின் புகைப்படத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல், முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான் தலைமையில் அக்கட்சியினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனா். தொடா்ந்து, ஆணையா் மோனிகா ராணாவிடம் முறையிட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் தவெகவினா் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.