திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
உவரி அருகேயுள்ள மரக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுடலை முத்து கோனாா் (73).
இவா், தெருக் குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக சென்றபோது, சாலையோரம் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துவிட்டாராம்.
அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து அவரது மகன் முருகன் அளித்த புகாரின்பேரில், உவரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










