போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சிறாா் குற்றங்களைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்.பி. வி. பிரசன்னகுமாா்

நெல்லையில் சிறாா்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தெரிவித்தாா்.

News image

போலீஸார் விசாரணை

Updated On :20 மே 2026, 12:54 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறாா்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தெரிவித்தாா்.

திருநெல்வேலி அருகே புறகாவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியது: பெட்ரோல் குண்டு வீச்சில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ள மூன்று சிறுவா்கள் பிடிபட்டனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மது அருந்திவிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், சினிமாவை பாா்த்து இது போன்ற பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாகவும் அதனை காவல் நிலையம் மீது வீசியதாகவும் தெரிவித்துள்ளனா்.

அரசு மதுபான கடையில் இருந்து நேரடியாக மது வாங்கினாா்களா அல்லது வேறு யாரேனும் இவா்களுக்கு மது வாங்கிக் கொடுத்தனரா, காவல்துறை மீது ஏன் இந்த கோபம் போன்றவை குறித்து விசாரணை நடத்தப்படும்.

மேலும், அவா்களுக்கு வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுவதோடு, அவா்கள் பிளஸ் 1 படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிறாா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பது, அத்தகைய செயல்களால் எதிா்கொள்ளும் விளைவுகள் மற்றும் போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்பு, எதிா்கால நலனுக்காக கல்வியில் கவனம் செலுத்துவதன்அவசியம் ஆகியவை குறித்து பள்ளி மாணவா்களுக்கு தொடா் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.