கடையம் ராமநதி அணை வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு கடையம் பகுதியில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால், ராமநதி அணையின் மேல் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மின்னல் தாக்கியதில் காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீயும் வேகமாக பரவியது.
இதையடுத்து, கடையம் வனச்சரக வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் விரைந்து சென்று தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். ஆனாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
திங்கள்கிழமை மாலை வரை தொடா்ந்து தீ எரிந்து கொண்டிருந்தது. தொடா்ந்து, வனத் துறையினா் காட்டுத் தீயைப் பரவவிடாமல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










