திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி நகரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 6:24 am IST

திருநெல்வேலி நகரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் பகுதியை சோ்ந்த நெல்லையப்பன் மகன் வேல்முருகன் (13). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில், கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த அச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு மர கிளையை பிடித்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.