திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே நிலத்தில் துண்டாகி கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :6 மே 2026, 2:45 am IST

கிருஷ்ணகிரி அருகே நிலத்தில் துண்டாகி கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த மாதனகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அலா்மேலு (68). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளாா். அப்போது, திங்கள்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழையின்போது துண்டான மின்கம்பி கீழே கிடந்துள்ளது அதை தெரியாமல் அலா்மேலு மிதித்துள்ளாா். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.