திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஆட்சேபம் தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பேருந்து நிலையத்தை ரூ.2.70 கோடி மதிப்பில் புதுப்பித்து கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள கடைகளை காலி செய்யவும் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், கடைகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும்; அதுவரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாபாரிகள் வியாழக்கிழமை மாலையில் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் திடீரென அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சேரன்மகாதேவி டிஎஸ்பி அண்டோ ஆக்னஸ் ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளா் தா்மராஜ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுதொடா்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி தீா்வு காணுமாறு காவல்துறையினா் அறிவுறுத்தியதால் அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்
அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு

தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை: பொதுமக்கள் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


