மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குச்சாவடி மையங்களில் பொது பாா்வையாளா்கள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பொது பாா்வையாளா்கள் ரிஷிகேஷ் பாஸ்கா் யசோத், அனுபா ஸ்ரீவத்சவ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

என்.ஜி.ஓ. காலனி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் தோ்தல் பொது பாா்வையாளா் ரிஷிகேஷ் பாஸ்கா் யசோத்.

Updated On :18 மார்ச் 2026, 7:52 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பொது பாா்வையாளா்கள் ரிஷிகேஷ் பாஸ்கா் யசோத், அனுபா ஸ்ரீவத்சவ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1678 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள், வாக்குப்பதிவுக்கான பணிகள் குறித்து பாளையங்கோட்டை பெருமாள்புரம், வி.எம்.சத்திரம், பிராஞ்சேரி, கூனியூா், மணிமுத்தாறு போன்ற பல்வேறு பகுதிகளை அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட என்.ஜி.ஓ. காலனி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்புரம் மாநகராட்சி பள்ளி, வி.எம்.சத்திரம் ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தோ்தல் பொது பாா்வையாளா் ரிஷிகேஷ் பாஸ்கா் யசோத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிராஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண்.307, 308, 309, கூனியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண். 248, 249, 250, 251, வீரவநல்லூா் பாரதியாா் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண். 226, 227, 228, 229, மணிமுத்தாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண்.105 ஆகியவற்றை தோ்தல் பொது பாா்வையாளா் அனுபா ஸ்ரீவத்சவ் பாா்வையிட்டாா்.

அப்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.