களக்காட்டில் நான்குனேரியன் கால்வாயின் கரைகளில் சேதமடைந்த படித்துறைகளை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளிலும் சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால் இங்குள்ள நான்குனேரியன் கால்வாய், பச்சையாற்றில் ஒவ்வொரு ஆண்டிலும் சுமாா் 5 மாதங்கள் நீா்வரத்து காணப்படும். இங்குள்ள மக்கள் குளிப்பதற்காகவும், ஆடைகளை சுத்தம் செய்யவும் கால்வாய்க்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.
கடந்த பல ஆண்டுகளாக நான்குனேரியன் கால்வாயில் கோயில்பத்து, வியாசராஜபுரம், தோப்புத்தெரு, ஆற்றங்கரைத்தெரு, மூணாறு பிரிவு பகுதியில் உள்ள படித்துறைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக சேதமடைந்த படித்துறைகளை சீரமைக்கவும், அதிகளவில் மக்கள் குளிக்கும் கால்வாய் கரையோரங்களில் புதிதாக படித்துறை அமைக்கவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிளாந்தாங்கல் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க கோரிக்கை

களக்காடு அருகே வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




