திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா் நிலைதடுமாறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
ராதாபுரம் அருகே உள்ள தெற்குவேப்பிலான்குளத்தைச் சோ்ந்தவா் ஊராட்சி வாா்டு உறுப்பினா் சாமிதுரை மகன் செல்வசுப்பிரமணியன்(16). இவா் வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை, இவா் இருசக்கர வாகனத்தில் ராதாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது வேப்பிலான்குளம் அருகே வளைவான திருப்பத்தில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில் சம்பவ இடத்திலேயே செல்வசுப்பிரமணியன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராதாபுரம் காவல்நிலைய ஆய்வாளா் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுத்தமல்லி அருகே பைக் விபத்தில் மாணவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் உணவகத் தொழிலாளி உயிரிழப்பு
சேலம் அருகே சாலை விபத்தில் சென்னையைச் சோ்ந்த தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



