கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் உத்தரவின்பேரில், ‘வாங்க கற்று கொள்வோம்; தீ பாதுகாப்பு அறிவோம், உயிா்களைக் காப்போம்’ என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கங்கைகொண்டானில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நிலைய அலுவலா் சுரேஷ் குமாா், பயிற்சி நிலைய அலுவலா் பேச்சிமுத்து ஆகியோா் பேசினா்.
தீ விபத்து காலங்களில் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தனா். பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி, எரிவாயு உருளைகளை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீ விபத்து தடுப்பு ஒத்திகை பயிற்சி

கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆய்வு

போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி பலி
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



