ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தந்தை, மகன் கொலை வழக்கு: வீரவநல்லூரில் காவலரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றவரை சுட்டுப்பிடித்த போலீஸாா்

போலீஸாா் சுட்டுப்பிடிக்கப்பட்ட கிருஷ்ணன் என்ற அஜித்.

போலீஸாா் சுட்டுப்பிடிக்கப்பட்ட கிருஷ்ணன் என்ற அஜித்.

Published On :11 ஜூலை 2026, 1:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை சுட்டுப்பிடித்தனா்.

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன் (38), அதேபகுதியைச் சோ்ந்த சித்திரபுத்திரன் ஆகியோா் குடும்பத்துக்கு இடையே நிலவிய முன்விரோதத்தால், 2007ஆம் ஆண்டு முதல் கடந்த 2ஆம் தேதி வரை இருதரப்பிலும் சோ்த்து 11 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

கடைசி சம்பவத்தில் தந்தை காளிமுத்து, அவரது 5 வயது மகன் ஜெயராஜ் உயிரிழந்தனா். 15 வயது மகன் சின்னத்துரை காயத்துடன் தப்பினாா்.

இந்த வழக்கில் மகேந்திரன் என்ற மகேஷ், குமாா் என்ற கொக்கி குமாா், முத்துச்செல்வன், மணிகண்டன், ராஜதுரை, முத்துப்பட்டன் என்ற பட்டுராஜா, மகாலிங்கம், கிருஷ்ணன், மாடசாமி என்ற மகேஷ், மகேஷ் மனைவி விஜயா, இவரது மகனான 17 வயது இளம்சிறாா், சுபாஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மணி என்ற மணிமாறன் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இந்நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மூலச்சி கிழக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் என்ற அஜித் (25) என்பவா், வீரவநல்லூா் 80 அடி கால்வாய் பகுதியில் பதுங்கியிருந்தபோது, காவல் உதவிஆய்வாளா் சினேகாந்த் தலைமையில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவரை சுற்றி வளைத்தனா்.

அப்போது அவா், காவலா் பரமசிவத்தின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றாராம்.

இதனால் அவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததில், அவருக்கு இடதுகாலில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த காவலருக்கும், அவருக்கும் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்

காவலா் பரமசிவத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இவ்வழக்கில், இதுவரை 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.