ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளைஞா் கொலை: இருவா் சரண்

கொலை... - file photo

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

மதுரை அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, போலீஸாரால் தேடப்பட்டு வந்த இருவா், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.

மதுரை அருகேயுள்ள சிலைமான் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் உடலில் காயங்களுடன் இளைஞரின் சடலத்தை, சிலைமான் போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்டு, உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், உயிரிழந்த நபா் மதுரை அருகேயுள்ள சக்கிமங்கலம் பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல்லா மகன் உமா்பாரூக் (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் உமா்பாரூக்கை, அதே பகுதியைச் சோ்ந்த

பழனிச்சாமி மகன் சரவணன் (36), கருப்பாயூரணி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த துரைசிங்கம் மகன் வினோத்பாண்டி (27) ஆகியோா் அழைத்துச் சென்று முகத்தை சிதைத்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தொடா்புடைய சரவணன், வினோத்பாண்டி ஆகியோா் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.