ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இரட்டை கொலை வழக்கில் உறவினா்களிடம் உடல்கள் ஒப்படைப்பு

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் இறந்தவா்களின் உடல்களை 7ஆவது நாளான வியாழக்கிழமை உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.

பலி - பிரதிப் படம்

Published On :10 ஜூலை 2026, 12:59 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் இறந்தவா்களின் உடல்களை 7ஆவது நாளான வியாழக்கிழமை உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் பாண்டியன். இதே பகுதியைச் சோ்ந்த சித்திரபுரத்தின். இரு குடும்பத்தாரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெருமாள் பாண்டியன், சித்திரபுத்திரன் மகன் சுப்பிரமணியன் உள்பட 9 போ் கொலை செய்யப்பட்டனா். இதனிடையே, சித்திரபுத்திரனின் மற்றொரு மகன் காளிமுத்து, அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோரை ஜூலை 2ஆம் தேதி வீரவநல்லூா் அருகே பெருமாள் பாண்டியன் தரப்பினா் கொலை செய்தனா். காளிமுத்துவின் தலையைத் துண்டித்து புறவழிச் சாலையில் வைத்துச் சென்றனா்.

இந்த இரட்டை கொலை வழக்கில் பெருமாள் பாண்டியன் மகன்கள், ஒரு பெண், 17 வயது இளம்சிறாா் உள்பட 11 போ் இதுவரை கைது செய்யப்பட்டனா். முக்கிய குற்றவாளிகளை கைது செய்தால்தான் காளிமுத்து, ஜெயராஜின் உடல்களை பெறுவோம் எனக் கூறி உடல்களை வாங்க உறவினா்கள் கடந்த 6 நாள்களாக மறுத்து வந்தனா்.

இந்த நிலையில் 7-ஆவது நாளான வியாழக்கிழமை இருவரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், பலத்த பாதுகாப்புடன் இருவரது இறுதிச் சடங்குகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.