ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீரவநல்லூா் இரட்டை கொலை சம்பவம்: உடல்களை வாங்க 6ஆவது நாளாக மறுப்பு

வீரவநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டபோதும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, உடல்களை வாங்க 6ஆவது நாளாக உறவினா்கள் மறுத்துவிட்டனா்.

பலி

Published On :9 ஜூலை 2026, 12:04 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டபோதும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, உடல்களை வாங்க 6ஆவது நாளாக உறவினா்கள் மறுத்துவிட்டனா்.

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன், அதேபகுதியைச் சோ்ந்த சித்திரபுத்திரன் ஆகியோா் குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2007முதல் இதுவரை இரு தரப்பிலும் 9 போ் கொலை செய்யப்பட்டனா்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40), அவரது மகன் ஜெயராஜ் (5) ஆகியோா் கொலை செய்யப்பட்டனா். இவ்வழக்கில் பெருமாள் பாண்டியன் தரப்பை சோ்ந்த 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனினும், முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை; அவா்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, தந்தை-மகன் உடல்களை வாங்க உறவினா்கள் 6ஆவது நாளாக புதன்கிழமையும் மறுத்துவிட்டனா். மூலச்சி, கரம்பை பகுதியில் தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.