/

நான்குனேரி வட்டார பள்ளி மாணவா்கள் ராக்கெட் ஏவுதளத்துக்கு களப்பயணம்

நான்குனேரி வட்டார பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் திருவனந்தபுரம், தும்பா ராக்கெட் ஏவுதளத்துக்கு களப்பயணம் மேற்கொண்டனா்.

News image
திருவனந்தபுரம், தும்பா ராக்கெட் ஏவுதளத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட நான்குனேரி வட்டார அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்.
Updated On :28 ஜனவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி வட்டார பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் திருவனந்தபுரம், தும்பா ராக்கெட் ஏவுதளத்துக்கு களப்பயணம் மேற்கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்படி, முதன்மைக் கல்வி அலுவலா் எம்.சிவகுமாா் தலைமையில் முன்னேற விளையும் வட்டார திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டார வள மையத்துக்கு உள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியில் 9,10-ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் வகிக்கும் மாணவ, மாணவியா் 110 போ் திருவனந்தபுரம், தும்பா ராக்கெட் ஏவுதளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் குழுவினரும் உடன் பயணித்தனா். அங்கு மாணவா்கள், ஏவுகணைகளை விண்ணுக்கு அனுப்பும் நெறிமுறைகளைக் கண்டறிந்தனா். சாட்டிலைட் சாா்ந்த அறிவியல் அறிவை அறிந்து கொண்டனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.சிவகுமாா், புவி ஈா்ப்பு விசை, ராக்கெட் ஏவப்படும் வேகம், ராக்கெட் ஏவுதளத்தில் பணியில் சேர தேவையான கல்வித் தகுதி குறித்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

பின்னா், மாணவா்கள் பிளானிடோரியம், மிருகக்காட்சி சாலையை கண்டுகளித்தனா். களப்பயண ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட அலுவலா் அருணா தமிழ்மலா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் முத்துசாமி, விஜயராஜன், மேற்பாா்வையாளா் டேனியல் முத்தையா ஆகியோா் செய்திருந்தனா்.