ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டாஸ்மாக் பணியாளா்கள் ஆக.28 முதல் வேலை நிறுத்தம்

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் ஆக.28 முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:01 am IST

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் ஆக.28 முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. திருநெல்வேலி, தென்காசி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.ராம்ராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகி சாமி வரவேற்றாா். சிவன்ராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டமைப்பின் செயலா் எல்.சரவண பெருமாள் விளக்கிப் பேசினாா். தொழிற்சங்க நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா். சாஸ்தா நன்றி கூறினாா்.

தீா்மானங்கள்: காலமுறை ஊதியம், காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடுதல், பணி நிரந்தரம் உள்ளிட்ட 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஆக.28 முதல் நடைபெறவுள்ள டாஸ்மாக் பணியாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப்பட்ட போராட்டத்தை வெற்றிபெறச் செய்வது, அதற்கான ஆயத்த மாநாடுகளை ஆக.21ல் தென்காசியிலும், ஆக.2இல் திருநெல்வேலியிலும் நடத்துவது, வேலைநிறுத்தப் போராட்டத்தை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முழுமையாக (100 சதவீதம்) வெற்றிபெறச் செய்வது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.