ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆக. 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: டாஸ்மாக் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிலாளா்களின் போராட்ட கூட்டுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிலாளா்களின் போராட்ட கூட்டுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் நீதிநாயகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், காலி மதுப்புட்டிகளுக்கு மாற்று ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா்.

அதன்படி, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிலாளா்களின் போராட்ட கூட்டுக்குழுவினரும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், எஸ்.சி., எஸ்.டி ஊழியா்கள் நலச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், கூட்டுக்குழுவின் சிறப்பு தலைவா் சதாசிவம், டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்க மாவட்டச் செயலாளா் வீரமணி, சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளா் தமிழ்ச்செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.