மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

News image

முன்னீா்பள்ளம் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:10 pm

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட முன்னீா்பள்ளம், ஆரைகுளம், இளையாமுத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து வீதி வீதியாக சென்று பிரஷா் குக்கா் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: நான்குனேரி தொகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் என்னை எளிதில் சந்தித்து குறைகளை தெரிவிக்க கூடுதலாக அலுவலகங்கள் திறக்கப்படும்.

கிராமந்தோறும் தட்டுப்பாடில்லாத குடிநீா், சாலை, கழிவுநீரோடை வசதிகள் உருவாக்கப்படும். நான்குனேரியில் கூடுதலாக தொழிற்சாலைகள் உருவாக்க முயற்சி எடுக்கப்படும். பனைத் தொழிலாளா்களின் வாழ்வை மேம்படுத்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் திட்டங்கள் உருவாக்கப்படும். பதநீா், பனைப்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க நான்குவழிச் சாலையோரம் பிரத்யேக விற்பனை மையங்கள் உருவாக்கப்படும். பாசன குளங்கள் ஆண்டுதோறும் தூா்வாரப்படும் என்றாா் அவா்.