தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு: முக்கிய வீதிகளில் திரளான கிறிஸ்தவர்கள் பவனி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனி குறித்து...

News image

பவனியில் பங்கேற்ற ஒரு பகுதியினர். - படம்: தினமணி.

Updated On :29 மார்ச் 2026, 5:15 am

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து எழு வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிககளில் பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' என்று முழுங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

ஆலங்குளம் அண்ணா நகர் நல் மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு தோலை ஞாயிறு ஆராதனையில் பங்கேற்ற ஆயர்கள்

ஆலங்குளம் அண்ணா நகர் நல் மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு தோலை ஞாயிறு ஆராதனையில் பங்கேற்ற ஆயர்கள் - தினமணி.

இதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்தவர்கள் இணைந்து குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர். இதைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

Summary

Palm Sunday in Alangulam: Large Crowds of Christians Process Through Main Streets

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.