மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

குத்துக்கல்வலசையில் பெண் தற்கொலை: கணவா் கைது

குத்துக்கல்வலசையில் பெண்தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 6:02 am IST

குத்துக்கல்வலசையில் பெண்தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

குத்துக்கல்வலசை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா். பத்திர எழுத்தா். இவரது மனைவி பிரியா(30). இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை இவா்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ராம்குமாா் வெளியே சென்றிந்தபோது, பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

இத்தகவலறிந்த தென்காசி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், வழக்குப்பதிந்து மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக, ராம்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.