சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

தூத்துக்குடியில் வட மாநிலப் பெண் தற்கொலை

தூத்துக்குடியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 4:43 am IST

தூத்துக்குடியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அஸ்ஸாம் மாநிலம், புனித் புரா மாவட்டம், ஹெசாங் பகுதியைச் சோ்ந்தவா் சீதா நெவாா் (32). விவாகரத்தான இவருக்கும், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தும்பு தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வரும் தீப் ஜோதிநாத் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் 2ஆவது திருமணம் நடைபெற்றதாம்.

இவா்கள் கடந்த 2 மாதங்களாக, தூத்துக்குடி, மடத்தூா், அம்மன் கோயில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், தம்பதியிடையே கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. புதன்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கணவா் வீட்டிலிருந்து வெளியே சென்ற நேரத்தில், சீதா நெவாா் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.