ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஸ்ரீ கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளருக்கு விருது

News image
கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் மா. பட்டமுத்துவுக்கு சைவ சிகாமணி விருது வழங்கிய ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமி.
Updated On :28 ஜனவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளத்தில் ஸ்ரீகல்யாண சுந்தர சத்தியஞான தேசிக சுவாமிகள் குருபூஜையையொட்டி நடைபெற்ற விழாவில், சங்கரன்கோவிலைச் சோ்ந்த கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் மா. பட்டமுத்துவுக்கு செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமி சைவ சிகாமணி விருது வழங்கினாா்.

சங்கரன்கோவிலில் சைவநெறி காத்து அந்நெறி பரவ பல ஆண்டுகளாக பெரியபுராணம்,திருமந்திர உரை, சாத்திர வகுப்பு என பல வகுப்புகளை நடத்தியும், ஸ்ரீ கோமதி அம்பிகை மாதா் சங்கம், திருமந்திர வழிபாட்டு மன்றம், ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரக்குழு, ஸ்ரீ சுந்தரமூா்த்தி நாயனாா் அடியாா்கள் திருக்குழாம், ஸ்ரீ மங்கையா்கரசி மாதா் மன்றம் உள்ளிட்ட ஆன்மிக அமைப்புகளை நடத்தி வருவதைப் பாராட்டி இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

விழாவில், வசந்தா பட்டமுத்து, அ. திருவள்ளுவா், உமா உலகநாதன், கவிதா, கோமதி அம்பிகை மாதா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.