ஆலங்குளம் பேருந்து நிலைய புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால் தற்காலிக பேருந்து நிறுத்தத்துக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய வணிக நகரான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையம், கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்டு சுமாா் 43 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது மிகவும் சிதிலமடைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் இங்குள்ள கட்டடங்களின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவியது. இதைக் கருத்தில் கொண்டு, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.35 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
புதிய கட்டுமானத்துக்காகக் குத்தகைதாரா்களிடம் கடைகளைக் காலி செய்யுமாறு பேரூராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிா்த்து வியாபாரிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2024 செப்டம்பா் 18-இல் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, தற்போது பணி ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் கடைகளைத் தொடர அனுமதித்தால், அது மக்கள் நலத் திட்டத்தைத் தேவையற்ற முறையில் தாமதப்படுத்தும். மனிதாபிமான அடிப்படையில், பிப்ரவரி 15-ல் இருந்து கால அவகாசத்தை நீட்டித்து, வரும் 28.02.2026-க்குள் கடைகளை முழுமையாகக் காலி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனா்.
இதனால் வரும் சனிக்கிழமை வரையே பேருந்து நிலையம் செயல்படும். அதன் பின்னா் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பதால் தற்காலிக பேருந்து நிறுத்தம் தோ்வு செய்யும் பணியில் பேரூராட்சித் தலைவா்(பொ) ஜான்ரவி, செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், அதிகாரிகள் புதன்கிழமை ஈடுபட்டனா். கிழக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஸ்டேட் வங்கி முன்பாக இருந்தும், மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் கனரா வங்கி முன்பாக இருந்தும் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
அந்த இடங்களில் அடிப்படை தேவைகளான குடிநீா், கழிப்பறை வசதி, மின்விளக்கு, பயணிகள் நிற்பதற்கான நிழற்குடை ஆகியவை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

ஆலங்குளம் பேருந்து நிலைய இடம் மாற்றம்: போதிய ஏற்பாடுகள் இல்லாததால் பயணிகள் அவதி

தென்காசியில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


