செங்கோட்டை நுழைவாயில் பணியை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரிக்கை
செங்கோட்டையில் நுழைவுவாயில் (அலங்கார வளைவு) அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என, இண்டி கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.


செங்கோட்டையில் நுழைவுவாயில் (அலங்கார வளைவு) அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என, இண்டி கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
செங்கோட்டை நகரச் செயலா் ஆ. வெங்கடேசன், ஒன்றியச் செயலா் ஆ. ரவிசங்கா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் அளித்த மனு: செங்கோட்டையில் கேரள திருவிதாங்கூா் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட பழமையான சிதிலமடைந்த அலங்கார வளைவால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து நோ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் அதை அப்புறப்படுத்தியது.
தற்போது சிலரது அழுத்தத்தால் அதே இடத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதிய அலங்கார வளைவு அமைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள், குறிப்பாக மரங்கள், கட்டடங்கள் அகற்றப்படவில்லை. நகர எல்லையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி, நகராட்சியின் முகப்பு எல்லை எதுவென கண்டறிந்த பிறகே அலங்கார வளைவு அமைக்க வேண்டும் என்பது மக்களின் கருத்து.
பழைய வளைவு இருந்த இடம் வங்கி, கால்நடை மருத்துவமனை, நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இலத்தூா் பிரதான சாலை, பள்ளி என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. அங்கு அலங்கார வளைவு கட்டுவதைவிட போக்குவரத்து சிக்னல்களே உடனடித் தேவை.
பள்ளி மாணவா்களுக்கு பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ளன. விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சாலைப் போக்குவரத்து முடங்கினால், மாணவா்கள், தோ்தல் பணியில் ஈடுபடுவோா், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே அலங்கார வளைவு பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...