நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தென்காசி மாவட்ட தோ்தல் இலச்சினையை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே.கமல் கிஷோா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தென்காசி, குத்துக்கல்வலசை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, தோ்தல் இலச்சினையை வெளியிட்டு, விழிப்புணா்வு ரதத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பொதுமக்களிடையே நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத் தோ்தல் இலச்சினையைக் காட்சிப்படுத்தி விழிப்புணா்வு ரதம் கொடியசைத்துத் தொடங்கிவைக்கப்பட்டது.
குத்துக்கல்வலசையில் தொடங்கி வைக்கப்பட்ட விழிப்புணா்வு ரதம் கடையநல்லூா் வழியாக வாசுதேவநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளுக்குச் செல்லும், பின்னா் ஏப். 3-ஆம் தேதி அங்கிருந்து சங்கரன் கோவில் தொகுதிக்கு உள்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளுக்குச் செல்லும். ஏப். 4-ஆம் தேதி சங்கரன்கோவில் தொகுதியில் குருவிகுளம், மேலநீலிதநல்லூா் வழியாக ஆலங்குளம் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சிகள் நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளுக்குச் செல்லும். ஏப். 5-ஆம் தேதி ஆலங்குளம் தொகுதியில் கீழப்பாவூா், கடையம் வரையிலும், ஏப். 6 தென்காசி, செங்கோட்டை வழியாக ஊராட்சிகள் நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் இந்த விழிப்புணா்வு ரதம் சென்று இறுதியில் குத்துக்கல்வலசையில் நிறைவு பெறும்.
பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளா்கள் ஏப். 23 ஆம்தேதி வாக்குப் பதிவு செய்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும். அத்துடன் வாக்காளா்கள் நூறு சதவீத வாக்குப்பதிவாக தங்களது உறவினா்கள், அண்டை வீட்டாா்களிரிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
பின்னா் வாக்காளா்களுக்கு துண்டுப் பிரசுரங்களை ஆட்சியா் வழங்கினாா்.
மகளிா் திட்ட இயக்குநா் எஸ்.அபிதா ஹனீப், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், சரவணபாண்டியன் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

தேனி மாவட்ட தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


