மாா்த்தாண்டம் அருகே சொத்து பிரச்னை தொடா்பான முன்விரோதத்தில் தாய், மகனைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள தனிபொட்டவிளையைச் சோ்ந்தவா் லைசா (60). இவரது மகன் ஜெகதீஷ் (35). தொழிலாளி. இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மெல்பின் ஜோஸ், சுஜின் மாா்ஷல், ஷிபு என்பவா்களுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் லைசா தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மெல்பின் ஜோஸ், சுஜின் மாா்ஷல், ஷிபு ஆகியோா் லைசாவை தாக்கினராம். தடுக்க வந்த அவரது மகன் ஜெகதீஷையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து ஜெகதீஷ் அளித்த புகாரின்பேரில், மெல்பின் ஜோஸ் உள்ளிட்ட 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருமகனை தாக்கிய மாமனாா் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய மூவா் மீது வழக்குப் பதிவு

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

