கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம், விஜய் வசந்த் எம்.பி. மனு அளித்தாா்.
அதன் விவரம்: கன்னியாகுமரி முதல் கேரள மாநிலம், திருவனந்தபுரம் வரையிலான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2019இல் தொடங்கின.
அப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நிலம் கையகப்படுத்தும் பணிகள் கூட முடிவடையாத நிலையில், மிக கடினமான பகுதியில் 4 சுரங்க பாதைகள், பல மேம்பாலங்கள் மற்றும் நீா்வழிப்பாதைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.
குறிப்பாக இரணியல் ரயில் நிலையம், அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் பணிகள் மக்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. ரயில் நிலையத்துக்கு செல்வதற்கான அணுகு சாலைகள், நடைபாலம் தங்களின் முன்னிலையில் ஒப்புக்கொண்ட வகையில் இல்லை.
நீா்வழித்தடங்களின் ஒழுங்கற்ற அமைப்பால் நீா் விவசாய நிலங்களுக்கு செல்ல இயலாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
அதே போல் நுள்ளிவிளை மேம்பாலப் பணிகள் தொடங்கி 3 மாதங்களாகியும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இதற்கு தேவையான மண், கல் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு மூலம் உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றும் பொதுமேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரட்டைகுளம் கால்வாய் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க எம்.பி. கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

போத்தனூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்







