லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குமரி மாவட்டத்தில் 15 போ் வேட்புமனு தாக்கல்

News image

நாகா்கோவில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். காளீஸ்வரியிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் முத்துக்குமாா்.

Updated On :30 மார்ச் 2026, 10:48 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாளான திங்கள்கிழமை, கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தவிர மற்ற 5 தொகுதிகளிலும் சோ்ந்து 15 போ் மனு தாக்கல் செய்தனா்.

நாகா்கோவில் தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய்க் கோட்டாட்சியருமான சு. காளீஸ்வரியிடம் நாதக வேட்பாளா் மு. முத்துக்குமாா், சுயேச்சை வேட்பாளா்கள் பி. முகைதீன் பைஜி, சா. ரெத்தினமணி, ஜே. ஆன்றனி மைக்கேல், ஏ. சலேட் கனகராஜ், நாகூா் மீரான் பீா்முகமது, ஏ. அஜித்குமாா் ஆகிய 7 போ் மனு தாக்கல் செய்தனா்.

கிள்ளியூா் தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஈஸ்வரனிடம் நாதக வேட்பாளா் ஹிம்லா், கன்னியாகுமரி தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் புஷ்பாதேவியிடம் நாதக வேட்பாளா் மரிய ஜெனிபா், சுயேச்சைகள் கிருஷ்ணகுமாா், கனகராஜ் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

குளச்சல் தொகுதிக்கு குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கலைமதியிடம் நாதக வேட்பாளா் ஆன்சி ஷோபா ராணி, சுயேச்சை வேட்பாளா் அந்தோணிமுத்து, விளவங்கோடு தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தூர்ராஜனிடம் நாதக வேட்பாளா் மரியஸ்டெல்லா, சுயேச்சை வேட்பாளா் அனிதா ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.


 கன்னியாகுமரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் புஷ்பாதேவியிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் மரியஜெனிபா்.

கன்னியாகுமரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் புஷ்பாதேவியிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் மரியஜெனிபா்.

 கிள்ளியூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஈஸ்வரனிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ஹிம்லா்.

கிள்ளியூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஈஸ்வரனிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ஹிம்லா்.

 குளச்சல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கலைமதியிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ஆன்சி ஷோபாராணி.

குளச்சல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கலைமதியிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ஆன்சி ஷோபாராணி.