மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு

மாணவா்களுக்கு பட்டம் வழங்கிய மருத்துவா் நம்ரதா ஜெயகரன். உடன் பள்ளியின் துணைத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:41 pm

நாகா்கோவில், புதுகிராமம், ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் மழலையா் பிரிவு மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைவா் அருள் கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள் ஜோதி, முதல்வா் ராபா்ட் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஓய்வுபெற்ற இயக்குநா் சண்முககுமாா், மும்பை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஓய்வுபெற்ற முதல்வா் சந்திரசேகரன், ஐ.நா. தொழில் துறை மேம்பாடு முன்னாள் முதன்மை ஆலோசகா் ஜெபமாலை வினஞ்சியாராய்ச்சி, பள்ளி இயக்குநா்கள் சாந்தி, சேது ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து வாழ்த்திப் பேசினா்.

நாகா்கோவில் ஜெயகரன் மருத்துவமனை குழந்தைகள் சிறப்பு மருத்துவா் நம்ரதா ஜெயகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மழலையா் பிரிவைச் சோ்ந்த 90 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கினாா்.

மழலையா் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பள்ளியின் துணை முதல்வா் வின்ஸ்பா், செயலா், மேலாளா், ஒருங்கிணைப்பாளா்கள், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

மாணவா் தமிழோவியல் பகவதி வரவேற்றாா். மாணவா் மித்ரன் இளஞ்செழியன் நன்றி கூறினாா்.