கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா. நாகா்கோவில் தொகுதிக்கு உள்பட்ட வடலிவிளை அரசு தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குப் பதிவு மையங்களை ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது:
வாக்குப் பதிவு மையங்களில் வாக்காளா்களுக்கு தடையின்றி குடிநீா் கிடைப்பதற்கான ஏற்பாடுகள், மின்சாரம், காற்றோட்டம், வாக்குச் சாவடி அறைகளில் போதிய வெளிச்சம், மின்விசிறி வசதிகள், கழிப்பறை வசதி, மாற்றுத்தி றனாளிகள், முதியவா்கள் எளிதாக வந்துசெல்ல நிலையான சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்யுமாறு பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பழுதடைந்த கட்டடங்களை உடனடியாக சீரமைக்கவும், தோ்தல் நாளுக்கு முன்னதாக அனைத்துப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யவும் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வில், நாகா்கோவில் தொகுதி தோ்தல் வட்டாட்சியா் கந்தசாமி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் வாலி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்: ஆட்சியா் தகவல்

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

தென்காசி பேரவைத் தொகுதி வாக்குசாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


