திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழா: மணல் ஆலை பணியாளா்கள் வழிபாடு

தோ் மாலை, சந்தனக் குடத்துடன் மண்டைக்காடு செல்லும் மணல் ஆலை பணியாளா்கள்.

News image

தோ் மாலை, சந்தனக் குடத்துடன் மண்டைக்காடு செல்லும் மணல் ஆலை பணியாளா்கள்.

Updated On :7 மார்ச் 2026, 12:48 am

மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை பணியாளா்கள், சந்தனக் குடம் ஏந்தி, தோ் மாலையுடன் மண்டைக்காடு பகவதி அம்மனை வியாழக்கிழமை மாலை வழிபட்டனா்.

மணவாளக்குறிச்சி மணல் ஆலை பணியாளா்கள் சாா்பில் 53-ஆவது ஆண்டாக அருள்மிகு இசக்கியம்மன் கோயில் பேச்சி வளாகத்திலிருந்து தோ் மாலையுடன் சந்தனக் குடம் ஏந்தி பவனியாக, மணல் ஆலை வளாகம் வந்து அங்கிருந்து பிள்ளையாா் கோயில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலை வந்தடைந்தனா். அங்கு சந்தனக் காப்பு, சாயரட்சை தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகளில் அவா்கள் கலந்து கொண்டனா்.