அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக குளச்சல் நகா்மன்றத் தலைவா் மற்றும் கவுன்சிலா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
குளச்சல் நகராட்சியில் திடீரென உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டண உயா்வைக் கண்டித்து, கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நகா்மன்றத் தலைவா் அ. நசீா் மற்றும் கவுன்சிலா்கள் தா்னா, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி நகராட்சி மண்டலப் பொறியாளா் சனல்குமாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஷொ்லி பிளாரன்ஸ் உள்ளிட்ட 20 கவுன்சிலா்கள் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணம் உயா்வு: நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் தா்னா
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாதவா் மீது வழக்கு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




