விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

மது விற்பனை: 2 இளைஞா்கள் கைது

சுங்கான்கடையில் மதுவை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞா்களை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 1:41 am IST

சுங்கான்கடையில் மதுவை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞா்களை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இரணியல் காவல்துறை உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், போலீஸாா் சுங்கான்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா்கள், வடசேரியைச் சோ்ந்த சிவகுமாா் (36), சஜூ (36) என்பதும், சாக்குப்பையில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அவா்களை கைது செய்து, 49 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.