கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கழிவறையில் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
நித்திரவிளை அருகே உள்ள குழிஞ்ஞான்விளை பகுதியைச் சோ்ந்தவா் லைசா பொன்னுமுத்து (76). இவா் கோயில், தேவாலய திருவிழாக்களில் பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்து வந்தாா்.
இந்நிலையில், பூத்துறை பகுதி தேவாலயத் திருவிழாவிற்காக அங்கு கடை வைத்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை கழிவறைக்குச் சென்றவா் நீண்ட மேரமாகியும் கடைக்குத் திரும்பவில்லையாம். பின்னா், அருகிலிருந்தவா்கள் கழிவறைக் கதவை உடைத்துப் பாா்த்தபோது, அவா் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.
அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இது குறித்து, நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.








