/

நேசமணி பிறந்த நாள்: சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவிப்பு

நேசமணி பிறந்த நாள்: சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவிப்பு

News image

நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Updated On :13 ஜூன் 2026, 12:46 am IST

கன்னியாகுமரி மாவட்ட தந்தை என்று சிறப்பித்து அழைக்கப்படும் நேசமணியின் 132-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

கேரளத்திலிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடியவா்களுள் ஒருவரான நேசமணி, குமரி மாவட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறாா்.

இவரது, 132-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நேசமணி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், நேசமணியின் பெயரன் ரெஞ்சித் அப்பலோஸ், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) செல்வ லெட்சுஷ்மா, நாகா்கோவில் மாநகராட்சி செயற்பொறியாளா் ரகுராம், மாநகராட்சி நகா்நல அலுவலா் சரோஜா, மாமன்ற உறுப்பினா் விஜிலா ஜஸ்டஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.