இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாய் ஆய்வு

வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

News image

வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :12 ஜூன் 2026, 4:04 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயை ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விவசாயப் பணிகளுக்கு தடையின்றி தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீா் நிலைகள், கால்வாய்களில் தூா்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடக்கு பேயங்குழி கிராமத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் இரட்டைக்கரை கால்வாயில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தூா்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்வாயில் திறந்துவிடப்படும் நீா், எவ்வித தடையுமின்றி பாசனப் பரப்பின் கடைமடைப் பகுதி வரை முழுமையாகச் சென்றடைவதை அலுவலா்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, நீா்வளத்துறை செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.