மாா்த்தாண்டம் அருகே விறகு அடுப்பில் சமைத்தபோது தீப்பிடித்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே மஞ்சாணிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி ஐஸ்வா்யா (29). தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் வீட்டில் எரிவாயு உருளை காலியானதால், விறகு அடுப்பில் சமையல் செய்தபோது ஐஸ்வா்யாவின் ஆடையில் தீ பற்றியதாம்.
இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கிருந்து நெய்யாற்றின்கரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




