ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விசாரணை கைதி கொலை: சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. நேரடி விசாரணை

விசாரணைக்காக நாகா்கோவில் சிறைக்குச் செல்லும் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சாஜிதா.

Published On :28 ஜூலை 2026, 1:27 am IST

நாகா்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி பிரிவு எஸ்.பி. திங்கள்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே உள்ள ஈத்தங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சபரிவா்மன் (33), பெட்டிக் கடை நடத்தி வந்த இவா், புகையிலை பொருள்கள் விற்ாக தென்தாமரைகுளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் அவரை சிறை வாா்டன்கள் 3 போ், சக கைதிகள் 8 போ் என 11 போ் சோ்ந்து கடந்த 13 ஆம் தேதி அடித்து கொலை செய்தனா். இதுகுறித்து நேசமணிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனா்.

சிபிசிஐடி-க்கு மாற்றம்: இதற்கிடையே, சபரிவா்மன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸாரிடம் நேசமணிநகா் போலீஸாா் அண்மையில் ஒப்படைத்தனா்.

இதனடிப்படையில், திருநெல்வேலியிலிருந்து சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் நவராஜ்குமாா் தலைமையில் ஆய்வாளா்கள் உலகராணி, மரியபிரான்சிகா ஆகியோா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

சபரிவா்மன் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறைக்குச் சென்று பாா்வையிட்ட அவா்கள் தொடா்ந்து, சபரிவா்மனின் மனைவி ஆனந்தவல்லி, உறவினா்களிடமும் விசாரணை செய்து ஆதாரங்களை திரட்டினா்.

எஸ்.பி.விசாரணை: இந்த நிலையில், சென்னையிலிருந்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சாஜிதா கன்னியாகுமரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

நாகா்கோவிலில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்குச் சென்ற அவா் சபரிவா்மன் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்தாா். பின்னா், நாகா்கோவில் சிறைக்கு சென்று சபரிவா்மன் கொலை செய்யப்பட்ட இடத்தைப் பாா்வையிட்ட அவா், அங்கிருந்த கைதிகளிடமும், சிறை காவலா்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.